Jul 6, 2012

பண்டய தமிழ்நாடு



பழங்கற்கால மக்கள் ஜமின் பல்லாவரத்தில் வாழ்ந்த போது அவர்களுக்கு நீர் ஆதாரம் கொடுத்த ஒரு நதி இன்று சாக்கடையாய் 
கடலில் கலக்கிறதே அடையார் என்ற பெயரில் 
பொதேறி, கூடுவாஞ்சேரி வல்லகோட்டை ,மாகாணியம்,மலையபட்டு, சேத்துப்பட்டு,சோமமங்கலம் போன்ற பழங் கற்கால மக்கள் வாழ்ந்த இடங்கள் முழுவதும் இந்த ஆற்று படுக்கை இருந்ததே 

அந்த கல்லாறு என்ற அடையாறு கடலில் கலக்கும் இடத்தில் ஆமைகள் இன்றும் முட்டை இட வருகிறதே 

இன்று பெசன்ட் நகர் ,பட்டினப்பாக்கம் என்று அழைக்கப்படும் பகுதிகளின் பழைய பெயர் பற்றி 
கல்வெட்டுகளில் இருக்கிறதா ?

ஆம் 

ஆம்பூரில் கிடைத்த நடுகல் 

படுவூர் கோட்டத்து மேல் அடையாற்று ஆமையூர் 
என்று சொல்கின்றது 

இந்த ஆற்றின் வழியாக பாய் மர கப்பல்கள் பாயை கீழ் இருக்காமல் சாந்தோம் அருகில் இருந்த மைலாப்பூர் துறைமுகத்தில் பொருட்களை இறக்கி வைத்த காட்சிகள் எண்ணத்தில் வருகிறதா 
அன்றைய கடல் எங்கோ தூரத்தில் இருந்தது 

கடல் பொங்கி வந்தால் கடலை ஆற்றி ஆற்றுக்குள் விட்டு மறு பக்கமாய் கொண்டு வந்த நம் மக்களின் அறிவை என்னவென்று சொல்வது 

இந்த ஆற்றை சுத்தம் செய்ய முடியுமா 
முடியும் என்கின்றது உழைக்கின்ற சிந்திக்கின்ற உணர்வு உள்ள எண்ணங்கள் 

படித்து முடித்து தன் வேலை குடும்பம் என்று இருப்பவர்கள் தினமும் தான் வாழ்ந்து கொண்டு கடக்கும் இடத்தை திட்டி கொண்டு இருப்பதை ,அவர்களால் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க முடிய வில்லை 

பலர் உழைத்து கொண்டு தான் இருக்கிறார்கள் 

இன்றைய நகர வளர்ச்சி பல கடந்த கால சின்னங்களை மறந்து தான் இருக்கின்றது 

இன்னும் நிறைய இருக்கிறது சொல்ல சொல்ல 

அதற்கும் லைக் தான் கிடைக்கும் 


பின் குறிப்பு 


நேற்று மிக பெரிய உள்ளம் கொண்ட ஒருவரை அண்ணா நகரில் பார்த்த போது 
பூம்புகார் ஆய்வு தள்ளி கொண்டு செல்கிறது ,உதவி செய்யுங்கள் என்ற போது 

அவர் வீட்டிற்கு தினமும் நன்கொடை கேட்க வருகிறார்கள் என்று சொல்லி அலுத்து கொண்டு பிறகு ஆயிரம் தருகிறேன் என்று சலித்த போது 
நாக்கை பிடுங்கி கொண்டு சாகலாம் என்று இருந்தது 

ஆனால் அவர் அவரை பெருமைபடுத்த என்னை பயன் படுத்த முயன்றதும் நினைவிற்கும் வந்ததால் 

எனக்கு இது வரை உதவி செய்தவர்களை நினைத்து கனத்த மனதுடன் வந்தேன் 

நமது மக்களின் மன நிலை மாற்றங்கள் தேவை

No comments:

Post a Comment